- 10 மாதம் பாடுபட்டு ஒரு பொருளை விளையவைக்கும் ஒரு விவசாயிக்கு கிலோ ஒன்றுக்கு 13 ரூபாய் கிடைக்கிறது. அதை வாங்கும் ஒரு வியாபாரி இரண்டே நாளில் அதனை 26 ரூபாய்க்கு விற்றுவிடுகிறார்.
- வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களுடைய உரங்களை போட்டால் அதிக விளைச்சலை பெறலாம் என்று ஆசைகாட்டி நம் நிலங்களை சாகடித்துவிட்டனர். ரசாயன உரங்களை பயன்படுத்தினால் அதிக விளைச்சலை பெறமுடியும் என்கிற தவறான எண்ணத்தை மற்ற வேண்டும். விளைச்சல் அதிகமாகிறதோ இல்லையோ விளைநிலங்கள் செத்துவிடும் என்பதினை விவசாயிகள் உணரவேண்டும்.
- கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 1,66,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள்.
- மக்கள் உணவுக்கு செலவழிப்பதை விட மருந்துக்கு அதிகள் செலவு செய்கின்றனர்.
- இரசாயன உரங்களை அறவே புறந்தள்ளி, பாரம்பரிய இயற்கை விவசாய முறைகளை நாம் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்
Sunday, June 1, 2008
இயற்கை விவசாயம்
விளை நிலங்களை சாகடித்துவிட்டோம் என்கிற தலைப்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் உண்மை இதழுக்கு அளித்த நேர்காணலிலிருந்து என்னை கவர்த்த சில அம்சங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment