Saturday, July 7, 2012

இருவர்


ண்டையிட்டுக்கொண்டு சிறுவயதிலேயே வீட்டை விட்டு ஓடிவிட்டார். எனக்கு மாமா முறை. நீண்ட நாள் கழிந்து தந்தையின் மரண செய்தியறிந்து திரும்பி வந்து மீண்டும் குடும்பத்தோடு இணைந்து கொண்டவர்.  பின்னர் பணிக்காக வளைகுடா பயணம். கடிண வேலை என்றாலும் சுமாரான ஊதியம், நிலையான நிறுவனம். கொஞ்சம் தாமதமாக திருமணம்.  அடுத்தடுத்து மூன்று ஆண் பிள்ளைகள். இரண்டு வருடத்திற்கு ஒருமுறை விடுமுறைக்கு வரும் மாமா எனக்கு அதிகம் பழக்கமில்லை என்றாலும் அவரை ஏனோ எனக்கு பிடிக்கும்.   அளவாக ஒரு இடம் வாங்கி அதிலே அழகாய் ஒரு வீடு. பிள்ளைகளில் இரண்டு பேர் படித்து முடித்து பணியிலிருந்தனர். கடைக்குட்டி படித்துகொண்டிருந்தான். இருபதுக்கும் அதிகமான வருடங்கள் வளைகுடா வாழ்க்கைக்கு பின் உடல் நலமில்லாமல் வீடு வந்துவிட்டார்.

வர் குடும்பத்தின் முதல் ஆண்மகன். அக்காக்கள், தம்பிகள், தங்கைகள் என கொஞ்சம் பெரிய குடும்பம். தந்தையின் ஒரே வருமானம் போதாமல் போனதில் இளம் வயதிலேயே வளைகுடா வாசம். மிகக்கடினமான பெட்ரோல் போடும் வேலை. வெயில், மழை, குளிர் பொருட்படுத்தாது வேலை செய்திடல் வேண்டும். கொஞ்சம் நல்ல நிலை வந்தபின் திருமணம். தாமத திருமணம். மீண்டும் வளைகுடா வாசம். நான்கைந்து வருடம் கழிந்து, பெட்ரோல் வாசமும், அது தரும் அலர்ஜியும் பொறுக்காது வீடு திரும்பிவிட்டார். அடுத்தடுத்து மூன்று பெண்பிள்ளைகள். தனிக்குடித்தனம், வருமானமில்லாமல் நாட்கள் நகர மறுக்க,கடன் சுமைகள் கூடிவிட மீண்டும் வேலை தேடி வளைகுடா வாசம். ஒரு வருட போராட்டம், அலைச்சலுக்கு பின் வங்கியில் பியூன் போன்றதொரு வேலை, சுமாரான வருமானம். இரண்டு வருடம் எந்த இடையூறும் இல்லாமல் கழிந்தது. விடுமுறைக்கு வீடு வந்து சென்ற பின் அந்த வேலையில் வேறு ஒருவர் நிலைத்திட, இவருக்கு கடினமான வேலை தரப்பட, உடலும் மனமும் ஒத்துழைக்க மறுக்க, உடல்நலம் பாதிப்படைந்து வீடு திரும்பவேண்டியதாகிவிட்டது.

ந்த இருவரும் இன்று உயிரோடு இல்லை.

ருவருக்கும் அலர்ஜி, நுரையீரல் புண், சளி தொந்தரவு என சில நோய்கள் இருந்தது. ஆனாலும் எல்லா நோய்களுக்கும் ஒரு மூல காரணம் இருந்தது. அது புகைப்பிடித்தல்.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில், ஒரு மருத்துவர், "கடவுள் ஒரு குடும்பத்த சோதிக்கனுமுன்னு நினைச்சா அந்த வீட்ல யாரவது ஒருத்தருக்கு கான்சர் நோய குடுத்துட்டா போதும்" ன்னு சொன்னார். உண்மைதான். ஒரு வீட்டினுடைய சேமிப்பு, சந்தோஷம், எதிர்காலம் அத்தனையும் புரட்டிபோட வல்லதுதான் புற்றுநோய்.

நானும், நண்பர்களும் விரும்பி சுவைத்துகொண்டிருந்த புகையிலை, இது போன்ற நெருக்கமானவர்களின் இழப்புகளின்போது மிகுதியாய் கசக்கிறது.

ரணம் என்பது எல்லாரும் சுவைத்தே ஆகவேண்டிய கசப்புமருந்துதான். அந்த கசப்பென்பது விதித்தவருக்கு மட்டுமேயன்றி, சுற்றத்தாருக்கும், சொந்தங்களுக்கும் விதித்ததில்லை.

வல்லமை தந்துவிடு இறைவா..

2 comments:

Mohamed Yasin, Mel Pattam Bakkam said...

மனிதன் தான் வாழும் வரையில் எதை பற்றியும் சிந்திக்காத நிலையிலே காலத்தை கடத்துகிறான்... ஏதோ ஒரு சூழ்நிலையில் நாம் மிகவும் நேசிக்கும் ஒருவரை இறைவன் தான் பக்கம் எடுத்து கொள்ளும் போது ஏற்படும் வலிக்கு மருந்தில்லை!!! இதை படிக்கும் போது சிறுவயதில் (41)இரத்த புற்று நோயால் மரணித்த என் தந்தையின் மரணம் என்னை நினைவுட்டியது!!!

Mubarak said...

Ennodu pugaitha sagakkal, aduthavargal maranam kando allathu thannudiya vudal nalam karuthiyo illa sikkanathukkagavo.....vovoruvarai niruthuranunga, niruthipuutanunga....

Iraiva ithai vittozikkum vallamai tharayo...